ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்தார் என அந்நாட்டு அரசு இன்றைய தினம் தெரிவித்துள்ளது.
சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 1,300 ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்தார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் டோக்கியயோவின் எல்லையாக இருக்கும் கனகாவா மாகாணத்தில் வசிக்கும் 80 வயதுடைய பெண் ஆவார் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் சீனாவை சேர்ந்த ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment