இறந்துவிட்ட தனது 06 வயது மகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை ஒரு தாய்க்கு கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ”Meeting You" ஏற்படுத்தியுள்ளது.
மாயமில்லை மந்திரமில்லை, மெய்நிகர் யதார்த்த (Virtual Reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2016 ஆண்டில் இனம் காணப்படாத நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த தனது மகள் நயோனை அவரது தாய்க்கு சந்திக்கச் செய்துள்ளது கொரியாவைச் சேர்ந்த MBC நிறுவனம்.
இந்நிகழ்வு தாய் மகளை வெறுமனே சந்திப்பது மட்டுமன்றி தொடு உணர் கையுறைகள் மூலம் தொட்டு உணரும் வாய்ப்பபையும் அவருடன் உரையாடும் வாய்ப்பபையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது அந்த தாயின் அன்பு வெளிப்படுத்தலை ஆவணப்படமாக ”Meeting You" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இவ் ஆவணப்படத்தில், நயோனின் தாயார் ஜாங் ஜி-சங், மெய்நிகர் ரியாலிட்டி (வி.ஆர்) ஹெட்செட்டை, தொடு உணர் கையுறைகள் அணிந்து, ஒரு தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றார், அங்கு அவரது மகள் பிரகாசமான ஊதா நிற உடையில் சிரித்துக் கொண்டே நின்றார்.
அவளை சந்திக்கும் தாய் 'ஓ மை பியூட்டி, நான் உன்னைத் தவற விட்டேன்' என்று தமது வேதனையை வெளிப்படுத்துகின்றார். தன் மகளின் நிழலைப் பார்க்கும் தாய் ஜாங்-ஜி-சங், மகள் நயோனை தொட முயற்சிக்கிறார்.
இந்த அனுபவம் குறித்து தெரிவித்த தாயாரான ஜாங், “இது எனது கனவு. அந்த கனவை நான் அனுபவித்து விட்டேன்” என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment