கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் : மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 1, 2020

கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் : மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் தனது அமைச்சினூடாக இலங்கை பூராகவும் கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் என்னும் தேசிய வேலைத் திட்டமானது இன்று குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அது போன்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் தொனிப் பொருளிற்கு அமைவாக கல்குடா தேர்தல் தொகுதியில் சந்திவெளி கிராமத்தில் ஒரு வீடும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் புதூர் கிராமத்திற்கு ஒரு வீடும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் களுவாஞ்சிகுடி செல்வா நகரில் ஒரு வீட்டிற்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான எஸ்.வியாழேந்திரனுடன், மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் வெ.ஜெகன்நாதன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் உரையாற்றுகையில் கடந்த காலத்தில் இருந்த அரசாங்கம் போல் அல்லாது இந்த அரசாங்கத்தினால் துரிதமான அபிவிருத்திகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் அதிகளவான அபிவிருத்தியினை முன்னெடுக்கவும் அரசு திட்டங்களை முன்னெடுப்பதற்காகவும் இன்று ஆரம்பிக்கபடுகின்ற வீட்டுத் திட்டமானது ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியானதாகும் இதற்கு மேலதிகமாக உதவிகளை வழங்கவும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உரையாற்றுகையில் இந்த கிராமத்திற்கு நாட்டிற்கு எதிர்காலம் எனும் வேலைத் திட்டமானது உண்மையிலேயே வரிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் போதுதான் உண்மையான பயனாளிகள் நன்மையடைவார்க்ள எனவும் அரசினால் வழங்கப்படும் இவ்வாறான உதவியினை முழுமையாக இந்த வீட்டுத் திட்டத்திற்கு செலவு செய்து வீட்டினை இரண்டு மாதத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment