மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வரை சந்தித்து ஆசிகளை பெற்றுக் கொண்டார் புதிய அரசாங்க அதிபர் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 1, 2020

மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வரை சந்தித்து ஆசிகளை பெற்றுக் கொண்டார் புதிய அரசாங்க அதிபர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக வருகைதந்த அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இன்று (1) மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து உரையாடிய அரசாங்க அதிபருக்கு மாவட்டத்தின் சகல வழிகளிலும் தான் ஒத்தாசையாக இருந்து உதவி புரியவுள்ளதாகவும் கூறினார். 

அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் சாதி மத பேதங்களுக்கு அப்பால் மாவட்டத்தில் சகலருக்கும் சமமான சேவையினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்

இலங்கை நிர்வாக சேவையில் 29 வருட அனுபவம் வாய்ந்தவரும் மட்டக்கப்பு மாவட்டத்தினை தனது சொந்த மாவட்டமாக கொன்டவருமான அரசாங்க அதிபர் மாவட்டத்தின் அபிவித்தியின்பால் பற்றுடன் செயல்பட வேண்டும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஆசி வழங்கினார்.

No comments:

Post a Comment