கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து N95 முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா திடீரென தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும். இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக் கூடியது.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 12000 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் தற்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் எல்லோரும் முகத்தில் முகக் கவசங்களை அணிந்து சுற்றி வருகிறார்கள். வைரஸ் பரவாமல் இருப்பதற்காக இவர்கள் எல்லோரும் முகக் கவசம் அணிந்து வருகிறார்கள்.
இதற்காக N95 முகக் கவசம் பயன்படுத்தப்படுகிறது. இது கிருமிகள் பரவுவதை தடுக்கும். அதனால் இந்த முகக் கவசம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் விலையும் மிக அதிகம் ஆகும்.
தற்போது கெடுபிடி காரணமாக அங்கு முகக் கவசம் விலை மொத்தமாக அதிகரித்துள்ளது. இதில் நிறைய முறைகேடுகளும் நடந்து வருகிறது. சீனாவில் முகக் கவசம் தட்டுப்பாடு நிலவி வருவதால் இந்தியாவில் இருந்துதான் முகக் கவசங்களை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முக்கியமாக தமிழகத்தில் இருந்துதான் முகக் கவசங்களை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையை, சென்னையை சேர்ந்த பல நிறுவனங்கள் சீனாவிற்கு முகக் கவசங்களை ஏற்றுமதி செய்கிறது. இதற்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து N95 முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசு திடீரென தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை முகக் கவசங்களை ஏற்றுமதி செய்யக்கூடாது. உற்பத்தி செய்யப்படும் முகக் கவசங்கள் இந்தியாவிற்குள் விற்பனை செய்யப்படலாம். வைத்தியசாலைக்கு அனுப்பப்படலாம்.
ஆனால் சீனாவிற்கு அனுப்பக் கூடாது. முற்றிலுமாக விமான, கப்பல் ஏற்றுமதியை இதற்காக இந்தியா தடை செய்துள்ளது. இந்தியாவில் முகக் கவசங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் இந்த நடவடிக்கை என்று இந்திய மத்திய அரசு விளக்கி உள்ளது. இதனால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஆகவே தற்போது சீனாவில் பொலித்தீன் பைகள், குடிநீர் குடுவைகள், உள்ளாடைகள் போன்றவற்றை முகக் கவசங்களாக அணிந்து கொள்ளும் நிலை உருவானது. அங்கு மிக மோசமான முகக் கவசத்திற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment