பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மூலம் தினமும் இலங்கைக்குள் நுழையும் அனைத்து நபர்களையும் விசாரித்து அறிக்கை அளிக்க மூன்று பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் சுகாதார அமைச்சின் பேரிடர் மேலாண்மை பிரிவின் வைத்தியர், விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் பிரதிநிதி மற்றும் குடிவரவு, குடியகழ்வு துறையின் பிரதிநிதி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக உலக சுகாதார ஸ்தானம் பிரகடனப்படுத்தியுள்ள அவசரகால நிலையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
இதன்மூலம் தற்போதைய நிலைமையைக் கண்காணிப்பதில் ஒரு சுமுகமான செயற்பாட்டை உறுதி செய்வதற்காக அனைத்து சேவைகளையும் ஒன்றிணைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment