பிணைமுறி மோசடியுடன் தொடர்புள்ளவர்களுக்கு தண்டணை வழங்க சகலரும் முன்வர வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 19, 2020

பிணைமுறி மோசடியுடன் தொடர்புள்ளவர்களுக்கு தண்டணை வழங்க சகலரும் முன்வர வேண்டும்

ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு என்று பிரியாது பிணைமுறி மோசடியுடன் தொடர்புள்ளவர்களுக்கு தண்டனை வழங்க முன்வர வேண்டுமென ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி கூறினார். 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, இந்த அறிக்கையில் 5 பிரிவுகள் உள்ளன. 2015 இன் பின்னர் நிதிச் சபையின் அனுமதியின்றி பிணை முறி விநியோகிக்கப்பட்டது. அதனால் 2002 முதல் 2015 வரை ஒரு அறிக்கையும் 2015-/2016 வரை ஒரு அறிக்கையும் இதில் உள்ளது. 

நாட்டுக்கு ஏற்பட்ட நிதி நஷ்டம் குறித்து ஆராய வேண்டும். இதிலுள்ள 5 ஆவது அறிக்கையில் 2015 பெப்ரவரி முதல் 2016 மார்ச் வரையான காலப்பகுதியில் நடந்த மோசடி குறித்து உள்ளது. 

இது தொடர்பில் தற்போதைய அரசுக்கு நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கு முன்னுரிமை வழங்கி தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். தேவையான சாட்சிகள் இந்த அறிக்கையில் உள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகர்ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment