92 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன், டிப்பர் வாகனம் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

92 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன், டிப்பர் வாகனம் கைப்பற்றல்

யாழ். மானிப்பாய் - மருதனார்மடம் வீதியில் உடுவில் பகுதியில் 92 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன், டிப்பர் வாகனம் ஒன்றை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது குறித்த டிப்பர் வாகன சாரதி தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (12) அதிகாலை மானிப்பாயிலிருந்து வந்த டிப்பர் வாகனத்தை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வழிமறித்து சோதனை மேற்கொண்டபோது, டிப்பர் வாகனத்திற்குள் பொதி செய்யப்பட்ட நிலையில் கஞ்சா இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சா மற்றும் டிப்பர் வாகனத்தை விசேட அதிரடிப் படையினர் மீட்டு மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தப்பி ஓடிய வாகன சாரதி தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

(யாழ்ப்பாணம் நிருபர் - சுமித்தி தங்கராசா)

No comments:

Post a Comment