சூரியவெவ, பெத்தேவெவ பகுதியில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இன்று (13) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர், சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பெத்தேவெவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பணப் பிரச்சினை காரணமாக உயிரிழந்தவரின் சகோதரரினால் இத்துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளதை தொடர்ந்து அவரைக் கைது செய்யும் வகையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
No comments:
Post a Comment