அச்சுறுத்தும் கொரோனாவினால் உயருகிறது பலி எண்ணிக்கை - நேற்றைய தினம் 143 இறப்புகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

அச்சுறுத்தும் கொரோனாவினால் உயருகிறது பலி எண்ணிக்கை - நேற்றைய தினம் 143 இறப்புகள்

உலகில் 60 வீத சனத் தொகையயை பாதிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக நேற்றைய தினம் சீனாவில் 143 இறப்புகள் பதிவாகியுள்ளன. 

இதேவேளை, நேற்றைய தினம் 2,600 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளது. 

வெள்ளிக்கிழமை வரை, 2,641 புதிய கொரோனா வைரஸ் நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 66,492 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ளது. 

வைரஸ் தாக்கத்தினால் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஹூபேயில் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி 139 அதிகரித்துள்ளது. 

11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹானில் 107 பேர் புதிய இறப்புகள் வெள்ளிக்கிழமை பதிவாகியதையடுத்து இறப்புகளின் எண்ணிக்கை 1,123 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே, சுமார் 24 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கிட்டத்தட்ட 450 வழக்குகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. 

ஜப்பான் தனது முதல் கொரோனா வைரஸ் நோயாளியின் மரணத்தை வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. மேலும் ஒருவர் ஹொங்கொங்கிலும் ஒருவர் பிலிப்பைன்ஸிலும் இறந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு வீதம் சுமார் 2 வீதமாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நூற்றாண்டில் தோன்றிய பிற சுவாச வைரஸ்களை விட கொரோனா வைரஸ் வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது மற்றும் அதன் தீவிரத்தை மையமாகக் கொண்டு, இந்த வார இறுதியில் சீனாவுடன் இணைந்து உலக சுகாதாரை ஸ்தாபனம் தலைமையிலான குழு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விசாரணைகளை தொடங்கும் என உலக சுகாதாரை ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாடுகள் ரீதியாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை, 

1. சீனா : பாதிப்பு - 66,492 , உயிரிழப்பு - 1,523 
2. ஜப்பான் : பாதிப்பு - 252, உயிரிழப்பு - 01 
3. சிங்கப்பூர் : பாதிப்பு - 53 
4. தாய்லாந்து : பாதிப்பு - 33 
5. தென்கொரியா : பாதிப்பு - 28 
6. மலேசியா : பாதிப்பு - 19 
7. தாய்வான் : பாதிப்பு - 18 
8. வியட்நாம் : பாதிப்பு - 16 
9. ஜேர்மன் : பாதிப்பு - 16 
10. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 15 
11. பிரான்ஸ் : பாதிப்பு - 11 
12. மாக்கோ : பாதிப்பு - 10 
13. பிரிட்டன் : பாதிப்பு - 09 
14. டுபாய் : பாதிப்பு - 08 
15. கனடா : பாதிப்பு - 07 
16. இந்தியா : பாதிப்பு - 05 
17. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - 03, உயிரிழப்பு - 01 
18. இத்தாலி : பாதிப்பு - 03 
19. ரஷ்யா : பாதிப்பு - 02 
20. ஸ்பெய்ன் : பாதிப்பு - 02 
21. சுவீடன் : பாதிப்பு - 01 
22. நேபாள் : பாதிப்பு - 01 
23. இலங்கை : பாதிப்பு - 01 
24. பின்லாந்து : பாதிப்பு - 01 
25. கம்போடியா : பாதிப்பு - 01 
26. பெல்ஜியம் : பாதிப்பு - 01 
27. ஹொங்கொங் : பாதிப்பு - 53, உயிரிழப்பு - 01 
28. அமெரிக்கா : பாதிப்பு - 15

No comments:

Post a Comment