தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாச்சார பிரிவின் பொங்கல் விழா - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாச்சார பிரிவின் பொங்கல் விழா

பாறுக் ஷிஹான்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாச்சார பிரிவின் பொங்கல் விழா கலாச்சாரப் பிரிவு தலைவர் சிவஸ்ரீ த. ரதிகரசர்மா தலைமையில் மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (31) நண்பகல் பாரம்பரிய தமிழர் பண்பாட்டு கலாசார முறையில் கதிர் அடித்து நெல்குற்றி புத்தரிசை பானையிலிட்டு பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகியது .

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆத்மீக அதிதிகளாக கிழக்கு இந்து குருமார் சங்கத் தலைவர் சிவஸ்ரீ க.கு. சச்சிதானந்தசிவம் குருக்கள், சிவஸ்ரீ வே.கு.சபாநாயக குருக்கள், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்த மூர்த்தி, அபிவிருத்தி செய்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்தன, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் க. புவநேந்திரநாதன், மதகுருமார்கள், ஆலய பரிபாலன சபையினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பாரம்பரிய உடுக்கையடி வில்லுப்பாட்டு தமிழர்களின் பாரம்பரிய கலை கலாசார அம்சங்கள் உள்ளடங்கிய கிராமிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment