கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது உறுதி - கருணா அம்மான் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது உறுதி - கருணா அம்மான்

பாறுக் ஷிஹான்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற பின்னர் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அனைத்துக்கட்சி கூட்டங்களின் போது கலந்துரையாடியதாகவும் கூறினீர்கள் இது குறித்து மகிந்த ராஜபக்ச இவ்வாறான தீர்மானங்களை எடுத்து இருக்கிறா? ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதம மந்திரியுமான மஹிந்த ராஜபக்ச அவர்களை அவரது உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் மாலை ஐந்து முப்பது மணி அளவில் அனைத்து கட்சிகள் குழுவாக சந்தித்து இருந்தோம் அதிலே பல விடயங்கள் உரையாடப்பட்டது. 

அதிலே கல்முனை படம் தொடர்பாக நான் அவரிடம் எடுத்துக் கூறி இருந்தேன் அதனை தரமுயர்த்த தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார் அவர் அளித்த வாக்குறுதிகளை மீறி அவர் செயற்படாத அவர் ஆணித்தரமாக அனைத்து கட்சிகள் மத்தியில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார் .

இந்த விடயம் தொடர்பாக இன்று காலை பொதுநிர்வாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களிடம் பிரதமர் அவர்களின் தகவல்களை கொடுத்து அதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்னை பொறுத்த அளவில் இந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெறும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு மாகாணங்களை கெடுத்தது மாத்திரமல்லாது மேல் மாகாணத்தில் கொழும்பையும் கெடுக்க திட்டமிட்டுள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டினார்.

No comments:

Post a Comment