வாழைச்சேனை மீன் பிடித் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் அரசாங்க அதிபருக்கிடையில் பேச்சு - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

வாழைச்சேனை மீன் பிடித் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் அரசாங்க அதிபருக்கிடையில் பேச்சு

எஸ்.எம்.எம்.முர்ஷித்
கடல் தொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்தற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்று காலை இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து மாவட்டம் தொடர்பான அபிவிருத்திகளை ஆராய்ந்தனர்.

இலங்கைக்கான பின்லாந்து தூதுவரின் மட்டக்களப்பு விஜயத்தில் தான் முதலாவதாக இம் மாவட்டத்தில் பல்லின சமூகங்களும் ஒன்றிணைந்து வாழுகின்ற இம் மாவட்டத்தினை நான் பார்க்கிறேன் எனவும் அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மீன் வளத்தினை நவீன முறையில் அபிவிருத்தியினை மேற்கொண்டு பெறுமதி வாய்ந்த சந்தையினை உருவாக்க மீனவர்களுக்கான முளுமையான பயன்பாட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்கு தனது அரசு முழுமையான ஒத்துழைப்பினையும் அரசாங்கத்திற்கு ஊடாக செய்து கொடுப்பதாக குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டமானது கிழக்கு பகுதியை எடுத்துக் கொண்டால் அழகான நீல நிறமாக காட்சியளிக்கின்ற கடல் மிகுந்த பிரதேசமாகவும் மேற்குப் பகுதியைப் பார்த்தால் அழகிய பசுமை நிறைந்த வயல் வெளிகளை காணக் கூடியதாக இருக்கின்றது எனவும் இம் மாவட்டத்தில் சகல விதமான பழ வகைகளும் இம் மாவட்டதில் கிடைக்கின்றது. எல்லா வகையான வளமும் உள்ள இம் மாவட்டத்தினை மேலும் பெறுமதி சேர்க்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகல வழிகளிலும் உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்தார்.

இவ் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மாவட் டதிட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பகுதி தலைமை உத்தியோகத்தர் ஜஸிம் பாகிர் மற்றும் மாவட்ட மீன் பிடித் திணைக்கள உத்தியோகத்தர்கள் இக் கலந்துரையாடலில் பங்குகொண்டனர்.

No comments:

Post a Comment