ஏழ்மையில் கல்வி கற்கக் கூடாதா? அல்லது கல்வி கற்று முதன் நிலையில் ஏழை மாணவர்கள் சித்தியடையக் கூடாதா? - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

ஏழ்மையில் கல்வி கற்கக் கூடாதா? அல்லது கல்வி கற்று முதன் நிலையில் ஏழை மாணவர்கள் சித்தியடையக் கூடாதா?

றிபான் இஸ்மாயில் - ஓட்டமாவடி
இவ்வளவு காலமும் கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து யாரிடமும் கையேந்தாமல் கஷ்டப்பட்டு உழைத்து மகளை படிப்பித்த ஒரு ஏழைத் தந்தையின் மானத்தை இன்று சில ஊடகங்கள் காற்றில் தூவி விட்டுள்ளது.

ஏன் ஏழ்மையில் கல்வி கற்கக் கூடாதா? அல்லது கல்வி கற்று முதன் நிலையில் ஏழை மாணவர்கள் சித்தியடையக் கூடாதா?

பாராட்டுங்கள் வாழ்த்துங்கள் ஆனால் அவர்களின் குடும்ப நிலவரங்களை காற்றில் பறக்க விடாதீர்கள், அவர்களுக்கு என்று சில தன்மானம் உண்டு.

அந்த மாணவி பல்கலைக்கழகம் சென்று சக மாணவர்களுடன் சேர்ந்து அதாவது ஏழை மாணவர்களுடனும் வசதி படைத்த மாணவர்களுடனும் சேர்ந்து கல்வி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். 

எனவே அந்த மாணவியை பாராட்டுவதாக நினைத்து ராக்கிங் கும்பலுக்கு அதன் பலவீனத்தை தெரியப்படுத்துவதாகவே நினைக்கிறேன்,

அந்த மாணவிக்கு தேவை இருந்த நேரம் யாருமே உதவி இருக்கமாட்டார்கள் ஆனால் இன்று எல்லோரும் உதவி செய்ய ஓடுகிறார்கள்.

பாடசாலைக்கு செல்லும் எமது பிள்ளைகள் மூலம் தேவை உள்ள பிள்ளைகளை இணங்க கண்டு ஒரு கொப்பியை ஒரு பேனையை ஒரு வேளை சாப்பாட்டை எமது பிள்ளைகள் மூலம் கிடைக்க வைத்து எமது பிள்ளைகளையும் அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கலாம் என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment