மொட்டு சின்னத்திலேயே பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் : பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

மொட்டு சின்னத்திலேயே பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் : பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்திற்குள் எவரது ஆதரவையும் பெறாது பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசாங்கத்தினை அமைக்கும் அதிகாரத்தை மக்கள் பொதுத் தேர்தலின் ஊடாக வழங்க வேண்டும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்திலே பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என போக்குவரத்து சேவை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எடுத்த அரசியல் ரீதியான தீர்மானம் பொதுத் தேர்தலிலும் செயற்படுத்தப்பட வேண்டும்.

பாராளுமன்றத்திற்குள் பிறிதொரு தரப்பினரது ஆதரவை பெறாது பெரும்பான்மை ஆதரவுடன் கூடிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.

இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்திலே போட்டியிடுவோம் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்களும் கிடையாது.

மக்களின் அபிப்பிராயத்தை இச்சின்னமே முழுமையாக பெற்றுள்ளன. இடைக்கால அரசாங்கம் இம்மாதம் முதல் மக்களுக்கு முழுமையான சேவையினை முன்னெடுக்கும்.

அரச நிறுவனங்கள் மக்களுக்கு இலகுவான முறையிலும், துரிதமாகவும் சேவையாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சேவையினை பெற்றுக் கொள்வதற்கு முழு நாளையும் மக்கள் இனி அரச நிறுவனங்களில் செலவிட தேவையில்லை.அரச ஊழியர்களும் இன்று மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றார்கள். 

கனகர வாகனங்கள் தவிர்த்து ஏனைய வாகனங்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான வைத்திய அறிக்கையினை இனி அரச மற்றும் பிரதேச வைத்தியசாலைகளின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

அரச போக்குவரத்து சேவை முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்படும். பயணிகளின் நலன் கருதியும், சுற்றுசூழல் தொடர்பிலும் கவனம் செலுத்தி இன்று பல திட்டங்கள் போக்குவரத்து சேவையினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன. என்றார்.

No comments:

Post a Comment