கிட்டங்கி வாவி மீனவர்கள் கருணா அம்மானுக்கு மீன் வழங்கினர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

கிட்டங்கி வாவி மீனவர்கள் கருணா அம்மானுக்கு மீன் வழங்கினர்

பாறுக் ஷிஹான்

கிட்டங்கி வாவிக்கு குறுக்காக செல்லும் பாலம் தொடர்பாக ஆராய சென்ற கருணா அம்மானுக்கு மீனவர்கள் மீன் வழங்கி வரவேற்றனர்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள சமூர்த்தி வங்கி மற்றும் உப தபாற்கந்தோர் நிலைமைகளை செவ்வாய்க்கிழமை (31) ஆராய்ந்த பின்னர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிட்டங்கி பகுதிக்கு சென்றிருந்தார்.

இதன்போது கருணா அம்மானை வரவேற்ற மீனவர்கள் குறித்த வாவிக்கு மேலாக செல்லும் பாலத்தை திருத்தி தந்துதவுமாறு தெரிவித்தனர். அத்துடன் பெரிய மீன் ஒன்றினையும் வழங்கி வைத்தனர்.

No comments:

Post a Comment