விமான நிலையத்திற்குச் சென்று திரும்பிய வாகனம் விபத்து - நால்வர் வைத்தியசாலையில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

விமான நிலையத்திற்குச் சென்று திரும்பிய வாகனம் விபத்து - நால்வர் வைத்தியசாலையில்

விமான நிலையத்தில் இருந்து திரும்பிய வாகனமொன்று வவுனியா, கல்குண்டாமடுவில் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (01) இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில், அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் ரக வேனொன்று கட்டுப்பாட்டை இழந்து வவுனியா, ஏ9 வீதியில் உள்ள கல்குண்டாமடு குளத்தினுள் பாய்ந்து மூழ்கியுள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாக செயற்பட்டு வேனிலிருந்து உடனே வெளியேறியதால் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த வேனில் நான்கு பேர் பயணித்துள்ளதோடு, அவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

No comments:

Post a Comment