சிவனொளிபாதமலையின் மலசலக்கூடங்களுக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

சிவனொளிபாதமலையின் மலசலக்கூடங்களுக்கு பூட்டு

நல்லதண்ணி சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்லும் யாத்ரிகர்கள் பாவனைக்கு அமைக்கப்பட்ட மூன்று பொது கழிப்பறைகளை பழுதுபார்க்கும் வரை சுகாதாரத் துறையினரால் தற்காலிகமாக சீல் வைக்கப்படுள்ளதாக நுவரெலியா மாவட்ட நிர்வாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாதமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அவசர பரிசோதனையின் போது மக்கரதோரண, சாமா சைத்திய மற்றும் கங்குலத்தேன பகுதியில் உள்ள மூன்று கழிப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

மஸ்கெலியா பிரதேச சபையிலிருந்து குத்தகைக்கு வழங்கப்பட்டவற்றை தனியார் துறை மூலம் வாங்கப்பட்ட இந்த கழிப்பறைகள் சிவனடிபாதமலை பருவகாலத்தின் போது வருகை தரும் யாத்திரிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
இந்த கழிப்பறைகளின் கழிவு நீர் களனி ஆற்றின் முக்கிய துணை நதிகளின் ஒன்றான சீதகங்குல ஓயாவுக்கு சென்றடைவதால் அவ்வாற்றில் நீராடும் மக்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக நுவரெலியா மாவட்ட பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீதகங்குல ஓயாவின் நீர் மவுசாக்கலை நீர்தேக்கத்திற்கு சென்றடைவதால் பல்லுயிர் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தும் மக்கள் அச்சுறுத்தலாக அமையும் என நுவரெலியா மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் தெரிவித்தார்.

இப்பரிசோதனை நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட பொது சுகாதார அதிகாரி, நுவரெலியா மாவட்ட தொற்று நோய் நிபுணர் மற்றும் பொது சுகாதார அதிகாரி ஆகியோரினால் நல்லதண்ணி நகரம் மற்றும் நல்லதண்ணி சிவனடிபாதமலை பகுதிகளில் ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment