திண்மன்கழிவு, காணிப் பிரச்சினை, ஊடகவியலாளர் அனுமதி பிரேரணை - ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஹாமீத் அவர்களுக்கு பதில் வழங்கிய தவிசாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

திண்மன்கழிவு, காணிப் பிரச்சினை, ஊடகவியலாளர் அனுமதி பிரேரணை - ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஹாமீத் அவர்களுக்கு பதில் வழங்கிய தவிசாளர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிக்குள் சேகரிக்கப்படும் கழிவுகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் போதே தரம் பிரித்து பெறப்படும் திட்டம் பெப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அமுல்படுத்தப்படும் என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபையின் 22வது அமர்வும் இந்த வருடத்திற்கான முதலாவது அமர்வும் வியாழக்கிழமை (30) பிரதேச சபை சபா மண்டபத்தில் இடம் பெற்றபோதே தவிசாளர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

பிரதேச சபை உறுப்பினர் மௌலவி எம்.ஐ.ஹாமீத் சபை அமர்வின் போது திண்மன்கழிவு, காணிப் பிரச்சினை மற்றும் ஊடகவியலாளர் அனுமதிப் பிரச்சினை ஆகிய மூன்று பிரேரணைகளை முன்வைத்த பிரேரனைக்கு பதில் அளிக்கையிலயே தவிசாளர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் திண்மக்கழிவு தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு சூரிய ஒளியிலான மின்சாரம் பெறப்பட்டிருந்தது அது பழுதடைந்ததைத் தொடர்ந்து மின்சாரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதுவரை சேகரிக்கப்படும் கழிவுகளை உக்கக் கூடியது, உக்காதது என்று தரம் பிரித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படுவதுடன், உக்கக்கூடிய கழிவுகளை செயற்கை பசளை தயாரிப்பதற்கும், உட்காத கழிவுகளை கொடுவாமடு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் தளத்திற்கும் அனுப்புவது என்றும் தெரிவிக்கப்பட்டதையடுத்து அத்தீர்மாணம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சபை அமர்வின் போது ஊடகவியலாளர்கள் அனைவரையும் அழைக்க வேண்டும் என்று சபை உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்த தவிசாளர் பிரதேச ஊடகவியலாளர்கள் சபை அமர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த வேளையில் சபையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை கருத்திற் கொண்டு பிரதேசத்தின் ஒரு ஊடகவியலாளருக்கு சபை அமர்வின் மூன்று அமர்வுகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று சபை தீர்மானித்ததன் பின்னர் முறையாக எழுத்து மூலம் அனுமதி கோரிய ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அனுமதி வழங்காமல் அனைவரும் சபை அமர்வில் கலந்துகொள்ள முடியுமா இல்லையா என்பது தொடர்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சபையின் விஷேட அமர்வினை கூட்டி அதில் தீர்மானிப்போம் என்று தவிசாளர் தெரிவித்த கருத்திற்கமைய சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

ஓட்டாவடி பிரதேச சபை பிரிவிற்குள் அரச காணி ஒன்றை தொழிற்சாலை அமைப்பதற்காக இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள நிறுவனம் ஒன்று விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க பிரதேச சபை சிபார்சு செய்துள்ளதாக சபை உறுப்பினர் மௌலவி எம்.ஐ.ஹாமீத் தெரிவித்தார்.
இக்காணி தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எமது பிரதேச சபை எல்லைக்குள் பொதுத் தேவைகளுக்கு காணிகள் இல்லாமல் எனது பிரதேசம் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் குறித்த காணியை குறித்த நிறுவனத்திற்கு வழங்குவது தவறானது என்றும், அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய நபர் இப்பிரதேசத்தில் அரச காணிகள் பலவற்றை ஆட்சி செய்கின்றவர் என்பதனாலும் குறித்த காணியை குறித்த தொழிற்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு சபையின் ஊடாக வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இக்காணி தொடர்பாக பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் பதிலளிக்கையில் குறித்த காணி தொடர்பாக தொழிற்சாலை அமைக்கும் நிறுவனம் சபைக்கு எந்த கடிதமும் வழங்கப்படவில்லை. மாறாக ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குள் இளைஞர் யுவதிகளின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக தொழிற்சாலை ஒன்று அமையப்பெறவுள்ளதாகவும், அதற்கு சிபார்சு வழங்க கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு சபை குறித்த தொழிற்சாலை பிரதேசத்திற்கோ, பிரதேச மக்களுக்கோ இடையூறு இல்லாத வகையில் அமையும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment