கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை - உடனடியாக விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை - உடனடியாக விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு அறிவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் சில மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதலாம் வருட மாணவனை இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் தாக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தில் இன்று (20) முற்பகல் ஏற்பட்ட சம்பவம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் சுமுக நிலையை பேணும் வகையில் முதலாம் ஆண்டின் இரண்டாம் தவணையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் இரண்டாவது ஆண்டின் முதலாம் தவணையில் கல்வி கற்கும் மாணவர்களை உடனடியாக விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment