கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாணவர் குழுக்கிடையில் மோதல் - மாணவர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாணவர் குழுக்கிடையில் மோதல் - மாணவர் படுகாயம்

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் பகிடிவதை தொடர்பில் இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கியதில் முதலாம் வருட மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர். 

இந்த நிலையில் சம்பவதினமான இன்று திங்கட்கிழமை (20) பகல் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கொண்ட குழுவினர் யாரை கேட்டு இந்த அமைப்பை உருவாக்கியது என தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

இந்த தாக்குதலில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக சென்ற அம்புயூலன்ஸ் வண்டியை பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைய விடாமல் மாணவர்கள் தடுத்துள்ளனர். 

இதன் பின்னர் பல்கலைக்கழக பின்வழியால் அம்புயூலன்ஸ் வண்டி சென்று படுகாயடைந்த மாணவரை ஏற்றிக் கொண்டு வந்த வேளையில் வளாகத்தை விட்டு வெளியேற விடாமல் தாக்குதல் மேற்கொண்ட மாணவர்கள் மீண்டும் தடுத்துள்ளனர். 

அதன் பின்னர் காயப்பட்ட மாணவரை அம்புயூலன்ஸ் வண்டியில் எடுத்து கொண்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் சில மணி நேரம் பதற்ற நிலமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment