சந்தேக நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

சந்தேக நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்

(செ.தேன்மொழி) 

முச்சக்கர வண்டி கொள்ளைத் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரொருவரை அடையாளம் காணுவதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் உதவிக் கோரியுள்ளனர். 

கனேமுல்ல - உலுகடை சந்தியில் கடந்த ஐந்தாம் திகதி டப்லியூ.பி ஜி.ஓ 2756 என்ற இலக்கத்தகடை கொண்ட சிவப்பு நிறத்திலான முச்சக்கர வண்டியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இந்நிலையில் சி.சி.ரி.வி காணொளிகள் வாயிலாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் சந்தேக நபர் கொள்ளையிட்ட முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்பும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

இதனை தொடர்ந்து குறித்த காணொளிகளை வெளியிட்டுள்ள பொலிஸார். சந்தேக நபரை அடையாளம் காணுவதற்காக பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

குறித்த காணொளியில் உள்ள நபரை அடையாளம் கண்டால் 071-8591618 என்ற இலக்கத்தின் ஊடக தொடர்புகொண்டு கனேமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அல்லது 033-2260911 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு கனேமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment