வைத்திய மாணவி நிர்பயா கொலை விவகாரம் : நாளை சனிக்கிழமை தூக்குத் தண்டனை, தீர்ப்பு ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

வைத்திய மாணவி நிர்பயா கொலை விவகாரம் : நாளை சனிக்கிழமை தூக்குத் தண்டனை, தீர்ப்பு ஒத்திவைப்பு

நிர்பயா கொலைக் குற்றவாளிகளில் ஒருவர் புதிய மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ள நிலையில் தனித்தனியாக அவர்களைத் தூக்கிலிட முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தோடு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குற்றவாளிகள் நால்வருக்கும் நாளை சனிக்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, உச்ச நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில், டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பஸ்ஸில் வைத்திய மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டார். 

குறித்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 

4 குற்றவாளிகளுக்கும் பெப்ரவரி முதலாம் திகதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

அவ்வகையில், சிறார் சட்டப் பிரிவுகளின் கீழ் தனக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறிவரும் குற்றவாளி பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். 

அதில், கடந்த 2012 ஆம் ஆண்டு பொலிஸார் தன்னை கைது செய்த போது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதனால் தனக்கு சிறார் சட்டப் பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தனது மனுவைத் தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். 

இதே, கோரிக்கையை முன்வைத்து பவன் குமார் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்தது. 

இதற்கிடையே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இதன் போது விசாரணை முடிவைடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment