விற்பனைக்கு தயாரான நிலையில் 68,000 போலி முகக் கவசங்கள் - சோதனையின்போது மருந்தகமொன்றில் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

விற்பனைக்கு தயாரான நிலையில் 68,000 போலி முகக் கவசங்கள் - சோதனையின்போது மருந்தகமொன்றில் மீட்பு

ஹொங்கொங்கிலுள்ள ஒரு மருந்தகத்தில் இருந்து தவறான உற்பத்தி திகதி இடப்பட்ட 68,000 முகக் கவசங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள். 

கைப்பற்றப்பட்ட முகக் கவசங்களின் பெறுமதி 49,000 அமெரிக்க டொலர்களாகும் ஆகும். 50 முகக் கவசங்களைக் கொண்ட ஒவ்வொரு பெட்டியும் 36 டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. 

மருந்தகத்தின் உரிமையாளரான 27 வயதுடைய நபர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

சீனாவின் வுஹான் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் போலி முகக் கவசங்களை விற்கும் கடைகளை உடைக்க ஹொங்கொங் சுங்க அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டதை அடுத்து குறித்த முகக் கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

ஹொங்கொங் சுங்க மற்றும் கலால் துறையின் அதிகாரிகள் நகரம் முழுவதும் உள்ள 200 கடைகள் மற்றும் மருந்தகங்கள், உள்ளிட்ட இடங்களில் முகக் கவசங்கள் தொடர்பான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் ஹொங்கொங் முழுவதும் முகக் கவசங்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

சில கடைகளில் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றன என இணையத்தில் வதந்திகள் மற்றும் போலி தகவல்கள் பரவுவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment