எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் பாடசாலையின் முதலாம் தவணை ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை சிரமதானம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல்.அஹமட்லெப்பை தலைமையில் நடைபெற்ற சிரமதானத்தில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டு பாடசாலை சுற்று சூழலை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல பாடசாலைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு காணப்பட்ட நிலையில் பாடசாலைகளில் டெங்கு அபாயம் ஏற்படும் நிலைமை காணப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு டெங்கு தாக்கம் ஏற்படாத வகையில் பெற்றோர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் பாடசாலை சுற்று சூழல் மற்றும் நீர் தேங்கியுள்ள இடங்களை துப்பரவு செய்தனர்.
குறித்த பாடசாலையானது வாழைச்சேனை ஆற்றின் அருகில் காணப்படுகின்றது. மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாடசாலை வளாகத்தினுள் ஆற்றின் நீர் ஊடுறுவி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment