ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்தில் புதுவருட சத்திய பிரமாணமும், மர நடுகையும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்தில் புதுவருட சத்திய பிரமாணமும், மர நடுகையும்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்தில் 2020ம் ஆண்டு புதுவருட பிறப்பின் முதன் நாளில் அரச உத்தியோகத்தர்கள் கடமை தொடர்பிலான சத்திய பிரமானம் செய்யம் நிகழ்வு செயலகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அப்ஹர், நிருவாக உத்தியோகத்தர், செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டு, 2020ம் ஆண்டு புதுவருட பிறப்பின் முதன் நாளில் அரச உத்தியோகத்தர்கள் கடமை தொடர்பிலான சத்திய பிரமானம் செய்யப்பட்டது.
இங்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு இனிப்பு பண்டம் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சம் மிக்க நாடு என்ற தொலை நோக்கத்துக்கு அமைவாக வளரும் நாட்டுக்கு வளரும் மரம் என்ற திட்டத்தில் மரக்கன்று நடும் திட்டத்தில் செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள 29 சதவீதமான வனவளத்தை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் 35 சதவீதமாக அதிகரிப்பதற்காக இந்த தேசிய மர நடுகை வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment