பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட மீன்பிடி சங்கங்களை விரிவு படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை (31) முற்பகல் விஜயம் செய்து அப்பகுதி வாழ் மீனவ குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் கல்முனையில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.பி விக்ரம ஆராய்ச்சியை சந்தித்து மீனவ சங்கங்களின் வாழ்வாதாரம் பிரச்சினை கடன் வசதி மானிய முறையில் உதவிகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
தொடர்ந்து அவ்விடத்தில் இருந்து தொலைபேசி வழியாக கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு அம்பாறை மாவட்ட மீனவர்களின் நலன்புரி திட்டம் இறங்கு துறை அமைத்தல் மீனவ ஒய்வு அறைகள் அமைப்பது தொடர்பாக உரையாடியதுடன் தற்போது இயங்கும் மாவட்ட திணைக்களத்தின் பௌதீக வள பற்றாக்குறையையும் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதன் போது அமைச்சர் பதிலளிக்கையில் மிக விரைவில் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாகவும் அவ்வாறு வரும் போது மீனவர்களின் பிரச்சினைகளளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன் என கருணா அம்மானிற்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் திணைக்கள வளப்பற்றாக்குறைகளை முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment