தமிழ் தேசிய கூட்டமைப்பினரே வடக்கு கிழக்கு மாகாணங்களை கெடுத்தனர் - கருணா அம்மான் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

தமிழ் தேசிய கூட்டமைப்பினரே வடக்கு கிழக்கு மாகாணங்களை கெடுத்தனர் - கருணா அம்மான்

பாறுக் ஷிஹான்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு மாகாணங்களை கெடுத்தது மாத்திரமல்லாது மேல் மாகாணத்தில் கொழும்பையும் கெடுக்க திட்டமிட்டுள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டுயுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாச்சார பிரிவின் பொங்கல் விழா கலாச்சாரப் பிரிவு தலைவர் சிவஸ்ரீ த. ரதிகரசர்மா தலைமையில் மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (31) நண்பகல் பாரம்பரிய தமிழர் பண்பாட்டு கலாசார முறையில் கதிர் அடித்து இநெல்குற்றி புத்தரிசை பானையிலிட்டு பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகியது .

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரன் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்ததாவது

அம்பாறை மாவட்டம் அரசியல் வெற்றிடம் உள்ள மாவட்டமாக தற்போது காணப்பட்டு வருகிறது அங்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக குடிநீர் பிரச்சினை சுகாதார பிரச்சினை போன்ற பாரிய அடிப்படை வசதி பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்து வருகின்றோம். 
இந்த வேளையில் உங்களிடம் அன்பாக கேட்டுக் கொள்ளும் ஒரே விடயம். இந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும் ஒரு அரசாங்கமாக காணப்படுகிறது. இந்த அரசாங்கத்தை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றோம் என்பதில்தான் நமது புத்திசாலித்தனம் தங்கி இருக்கின்றது.

நேற்றிரவு கூட மதிப்புக்குரிய பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நீண்ட நேரம் அவரது அலரி மாளிகையில் வைத்து எமது தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்து உரையாடி இருந்தோம். குறிப்பாக இதில் கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது தொடர்பாக பேசியிருந்தேன் விரைவில் செய்து தருவதாக நமக்கு எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 

ஏனெனில் இதனை நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் இந்த அரசாங்கம் ஒரு பரிச்சயமான அரசாங்கம். இதனைப் பயன்படுத்துவதில் நமது புத்திசாலித்தனம் அடங்கியிருக்கின்றது நாம் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அதன் கீழ் அரசியல் நகர்வை முன்னெடுப்பதற்கான முன்னெடுப்புகளை தற்போது தற்போது நாம் முன்னெடுத்து வருகிறோம் அதில் ஒற்றுமையாக போட்டியிடுவதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் முன் வந்திருக்கின்றன.
தேர்தல் நெருங்கும் வேளையில் நாம் ஒற்றுமையுடன் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் வியூகம் ஒன்றை அமைத்து கொடுப்போம் அந்தக் கட்டத்தில் கிழக்கு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக நின்றால்தான் வெற்றி பெற முடியும். கிழக்கு மாகாணத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தமிழ் மக்களுக்கான கட்சி இதனை நீங்கள் வளர்த்துவிட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலா காலமாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது சிதறிப்போன ஒரு காட்சியாக மாற்றமடைந்துள்ளது இன்று யாழ் குடா நாட்டில் பல பிரிவுகளாக சிதறுண்டு கிடக்கின்றது இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கான ஒரு தீர்வை வழங்கப்போவதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு மாகாணங்களை கெடுத்தது மாத்திரமல்லாது மேல் மாகாணத்தில் கொழும்பையும் கெடுப்பதற்காக திட்டமிட்டுள்ளது. இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடப் போகிறது இங்கு கடந்த காலங்களில் பல பட்டயங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இதனை நிரூபித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நான் குறிப்பிட்டிருந்தேன் மூழ்கப் போகும் கப்பலில் பயணிக்க வேண்டாம் என்று அதை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்கவில்லை அவர்கள் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச விற்கு வாக்களித்திருந்தனர். இதற்கு யார் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே. 

13 அம்ச கோரிக்கை உடன் சென்றோம் அதனை நிராகரித்து பின்னர் தமிழ் மக்களை அன்னத்திற்கு வாக்களிக்கச் சொன்னார்கள் என்றால் இதற்கு பின்னால் ஊழல்கள் மலிந்து பண பரிமாற்றங்களும் இடம்பெற்றிருந்தன

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 லட்சத்து 88 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் இருந்தும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வெறும் 36 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே விழுந்திருந்தன ஆனால் எப்போதும் கிராமம் கிராமமாக நாம் செல்லும்போது மக்கள் வீதியை புனரமைப்பு செய்து தாருங்கள் இடமாற்றம் செசெய்து தாருங்கள் வேலை வாய்ப்பு பெற்றுத் தாருங்கள் என்று குறிப்பிடுகின்றனர். நாம் என்னவென்று வாக்களிக்காமல் அவற்றை பெற்றுக் கொள்வது நாமும் வாக்களித்து காட்டினால் மாத்திரமே அவர்களும் நன்றிக்கடன் உள்ளவர்களாக இருப்பார்கள். 
இனிவரும் தேர்தல்களில் தனித்துவமாக நின்று பயன்படுத்தி அரசாங்கத்துடன் சேர்ந்து எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதுடன் அபிவிருத்திகளை பெற்றுக் கொள்வதும் நமது நோக்கம் அபிவிருத்தியும் உரிமை சார்ந்த விடயங்களை சமாந்தரமாக செல்ல வேண்டும் இதற்காகத்தான் அடிக்கடி இந்த முஸ்லிம் சமூகத்தில் உதாரணம் காட்டுகிறேன் அவர்கள்தான் அரசியல் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்துகிறார்கள் நாம் அவ்வாறான தவறிழைத்து வருவதால்தான் அரசியல் உரிமை அபிவிருத்தி ரீதியான விடயங்களில் பாரிய வெற்றிடம் காணப்படுகிறது என சுட்டிக்காட்டினார்.

இவ்விழாவில் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பாரம்பரிய உடுக்கையடி வில்லுப்பாட்டுஇ தமிழர்களின் பாரம்பரிய கலை கலாசார அம்சங்கள் உள்ளடங்கிய கிராமிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரன், ஆத்மீக அதிதிகளாக கிழக்கு இந்து குருமார் சங்கத் தலைவர் சிவஸ்ரீ க .கு. சச்சிதானந்தசிவம் குருக்கள், சிவஸ்ரீ வே.கு.சபாநாயக குருக்கள், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்த மூர்த்தி, அபிவிருத்தி செய்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்தன, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் க. புவநேந்திரநாதன், மதகுருமார்கள், ஆலய பரிபாலன சபையினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment