கொழும்பு காலிமுத்திடலில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் அங்குள்ள குறைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு 24 மணி நேரமும் செயற்படும் வகையிலான கண்காணிப்பு குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து, இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு இந்த கண்காணிப்பு குழு நியமிப்பது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
காலிமுகத்திடல் பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னரே இவ்வறிவுறுத்தலை அவர் விடுத்தார். இவ்விஜயத்தின் பின்னர் அமைச்சர், காலிமுகத்திடலின் முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு அவசியமான பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.
பொழுதுபோக்கிற்காக மற்றும் ஓய்வுபொழுதை கழிப்பதற்காக பொதுமக்கள் வருகை தரும் கடற்கரைச் சார் காலிமுகத்திடலை மிகவும் சுத்தமான மற்றும் ரம்மியமான இடமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடனே அமைச்சர் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
விஜயத்தின் பின்னர் அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் விரைவாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் துறைமுக அதிகார சபை அதிகாரிகளை தெளிவூட்டினார்.
குறைப்பாடுகளை 03 நாட்களுக்குள் நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டதுடன், உல்லாசப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தடங்கல்கள் ஏற்படாதவாறு வீதிகளை புனரமைத்தல், கடைகளை நடத்திச் செல்கையில் மக்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முறையொன்றை திட்டமிடுதல் மற்றும் கடற்கரையை முழுமையாக சுத்தம் செய்தல் ஆகிய செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
No comments:
Post a Comment