உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியையும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் இருந்தும் கைது செய்யப்பட்ட இச்சந்தேக நபர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய காத்தான்குடி நிருபர்
No comments:
Post a Comment