தொழில் தருவதாக மோசடி - சுங்க பணியக உதவியாளர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 4, 2019

தொழில் தருவதாக மோசடி - சுங்க பணியக உதவியாளர் கைது

சுகாதார அமைச்சினூடாக சுகாதார உதவியாளர்கள் பதவியை பெற்றுத் தருவதாகக் கூறி பலரையும் ஏமாற்றி இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்ற குழுவினரை கைது செய்ய மருதானை மற்றும் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதன் பிரகாரம் இம்மோசடியில் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் சுங்க பணியகத்தின் உதவியாளரொருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்ஸா தெரிவித்துள்ளார். 

மருதானை பொலிஸ் நிலையத்துக்கு 04 முறைபாடுகளும், புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளதாக நிஸாந்த சொய்ஸா கூறினார். 14 இலட்சம் ரூபா பணத்தை அவர்களிடமிருந்து மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இம்மோசடி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலி நியமன கடிதங்களும் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் நிஸாந்த சொய்ஸா கூறினார்.

No comments:

Post a Comment