கிளிநொச்சி ஜம்புக்குளம் சட்டவிரோதமான முறையில் மண் போட்டு நிரப்பப்பட்டுள்ளதாகவும் இதனால் இப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் கிணறுகளில் நீர் இல்லாது போகும் நிலை காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கோரக்கன்கட்டு பகுதியில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக காணப்பட்ட சிறிய குளமான ஜம்புக்குளம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் ஒருவரால் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
குறித்த குளமானது நீண்ட காலம் பழமை வாய்ந்த குளமாக காணப்பட்டதுடன், இப்பிரதேசத்தில் உள்ள கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் ஓர் குளமாகவும் காணப்பட்டது.
அத்துடன் இக்குளம் காரணமாக அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணறுகளிலும் நன்னீர் காணப்பட்டது என்றும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் இக்குளத்தினை தற்போது தனியார் ஒருவர் அபகரித்து அதனை முழுமையாக மூடியுள்ளமை தொடர்பாக கமநல சேவை நிலையம் மற்றும் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டனர்.
பரந்தன் குறுப் நிருபர்
No comments:
Post a Comment