இலங்கை, மாலைதீவு போன்ற வளர்முக நாடுகள் பொருளாதார ரீதியில் மேன்மையடைய வேண்டுமாக இருந்தால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உலகளாவிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதுடன் போதைப்பொருள் வர்த்தகத்தையும் இல்லாதொழிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கு மாலைதீவும் இலங்கையும் ஒன்றிணைந்து தீர்வுகளைத் தேட வேண்டுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மாலைதீவுக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி உடனான சந்திப்பின் பின்னர் மாலைதீவு ஜனாதிபதி மாளிகையிலிருந்து விடுத்த கூட்டறிக்கையின்போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கு இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நல்லபலனை தந்திருக்கின்றது.
எங்களுடைய பிரதான நோக்கம் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான உறவுகளை மேலும் பலப்படுத்துவதாகும். இரண்டு நாடுகளுக்குமிடையில் காணப்படும் உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக நாங்கள் விரிவாக ஆராய்ந்திருக்கிறோம்.
இலங்கையும் மாலைதீவும் இந்து சமுத்திரத்தில் கடல் வழிப் பாதையிலேயே அமைந்திருக்கின்றன. இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு இரண்டு நாடுகளினதும் பொருளாதாரத்தை எப்படி பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை குறித்து கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கின்றோம். அதன் மூலமே இரு நாடுகளினதும் பொருளாதாரம் மேலும் பலமடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
அண்மைக் காலங்களில் இரண்டு நாடுகளதும் தனி நபர் வருமானம் கவனத்தில் கொள்ளத்தக்க விதத்தில் அதிகரித்திருக்கின்றது. என்றாலும் இரு நாடுகளுக்குமிடையிலான பல பொதுவான பிரச்சினைகள் பல இன்னமும் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. அவற்றை தீர்த்துக்கொள்வதற்கு இரு நாடுகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
மாலைதீவு அரசாங்கத்துடன் இணைந்து எமது அனுபவங்களை பரிமாரிக்கொள்ள வேண்டும். அதேபோன்று மாலைதீவின் முன்னேற்றத்திற்காக கைகொடுத்து உதவுவதற்கு எம்மால் முடியும். சுகாதாரத்துறையில் பல்வித சேவைகளை மாலைதீவுக்கு பெற்றுக்கொடுக்க நாம் இணக்கம் கண்டுள்ளோம்.
அதன்படி மாலைதீவு மக்களுக்கு உடலுறுப்புக்களை பொறுத்தும் வசதிகளை இலங்கையிலுள்ள தனியார் மருத்துவச் சேவைகள் மூலம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
No comments:
Post a Comment