விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி கருணாவின் அடியாட்களால் ஊடகவியலாளர்கள் வெளியேற்றம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2019

விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி கருணாவின் அடியாட்களால் ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றில் விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனின் அடியாட்களின் அச்சுறுத்தல் காரணமாக ஊடகவியலாளர்கள் பலர் வெளியேற்றப்பட்டனர்.

திங்கட்கிழமை (2) மாலை தீடிரென ஒழுங்கு செய்யப்பட்ட இம்மக்கள் சந்திப்பில் குறைந்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மையில் தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் மக்களை சில தரப்பினர் திட்டமிட்டு ஏமாற்றுவதை ஊடகங்கள் செய்தியாக வெளியீட்டு வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment