சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் ஐவரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 4, 2019

சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் ஐவரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைப்பு

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் ஐவரிடம் அக்கட்சி விளக்கம் கோரியுள்ளது.

இது தொடர்பில் 7 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு குறித்த எம்.பிக்கள் ஐவருக்கும் எழுத்துமூலம் அறிவிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக, சுதந்திர கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம். பௌஸி, லக்‌ஷ்மன் யாப்பா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது.

எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகிய எம்.பிக்கள் அண்மையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் உறுப்புரிமையை பெற்றிருந்தனர் என்பதோடு, லக்ஷ்மன் யாப்பா எம்.பி.யும் அக்கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment