கல்குடா ஜம்இய்யத்து தஃவதில் இஸ்லாமியா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து 05.09.2019 வியாழக்கிழமை (நாளை) ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாம் நடைபெற மாட்டாது என்பதனை அனைவரின் கவனத்திற்கும் அறியத்தருகின்றோம்.
இன்ஷா அல்லாஹ் மேற்படி முகாம் எதிர்வரும் 14.09.2019 சனிக்கிழமை காலை 09.30 மணி முதல் 1.30 மணி வரை மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெறும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய துறை சார் அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தினம் மாற்றப்பட்டுள்ளது.
எனவே நாளை இரத்ததான முகாம் நடைபெறமாட்டாது என்பதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் 14 ஆம் திகதி இரத்தம் தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் உரிய நேரத்துக்கு சமூகம் தருமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்
தகவல் ஊடகப் பிரிவு JDIK
No comments:
Post a Comment