இந்து பௌத்த முஸ்லிம் கத்தோலிக்க மக்கள் ஒன்றிணைந்து அடிப்படைவாதிகளை தோற்கடித்து பலமான தலைவரை தேர்ந்தெடுக்க முன்வரவேண்டும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 4, 2019

இந்து பௌத்த முஸ்லிம் கத்தோலிக்க மக்கள் ஒன்றிணைந்து அடிப்படைவாதிகளை தோற்கடித்து பலமான தலைவரை தேர்ந்தெடுக்க முன்வரவேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடிப்படைவாதிகளை தோற்கடித்து நல்லதொரு பலமான தலைவரை தேர்ந்தெடுக்க முன்வரவேண்டும். இதன் மூலமே அடுத்த ஐந்து வருட காலப் பகுதியில் நாட்டை அபிவிருத்தி செய்து முன்னேற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துலியரத்தன தேரர் தெரிவித்தார்.

அச்சுவேலியில் இந்து பௌத்த கலாசார நிலையத்தின் இரண்டாம் கற்கை நெறியை பின்பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், உலகில் உள்ள நாடுகளில் இலங்கை அழகான நாடு. இங்கு பல வளங்கள் காணப்படுகின்றன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கே நல்ல மனிதர்கள் வாழ்கின்றனர். 

எனினும் எமது நாடு இன்றுவரை முன்னேற்றம் அடையாது உள்ளது. இதற்கு காரணம் என்ன? இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் எவருக்கும் அடிபணியாது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய பலமான தலைவர்கள் உருவாக்கப்படாமையே ஆகும்.

இதுவே நாடு முன்னேற்றம் அடையாமைக்கான பதிலாக உள்ளது. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொண்டு முன்னேற்றுவதற்கு என்னிடம் பல யோசனைகள் உள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள இந்து பௌத்த முஸ்லிம் கத்தோலிக்க மக்கள் ஒன்றிணைந்து பலமான தலைவரை ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதற்காக ஒன்றுபட்டு அனைவரும் செயற்பட வேண்டும். இதன் மூலமே எதிர்வரும் ஐந்து வருட காலப் பகுதியில் நாட்டில் துரிதமான அபிவிருத்திகளை மேற்கொண்டு சுபீட்சமான நாட்டினை உருவாக்க முடியும்.

மொழிக் கற்கை பயின்றோர்களுக்கு மொழி அறிவினை விருத்தி செய்யும் வகையில் தற்காலிகமாக கொழும்பில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு எதிர்கால வாழ்வாதாரத்துக்கான பாட நெறியை கற்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அதே நேரம் தற்காலிகமாக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் தொழிலையும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளோம்.

வடக்கில் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை தேடி கொழும்பிற்கு செல்லாது இங்கேயே வாழ்வாதாரத்துக்கான தொழில் முயற்சிகள் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க யோசனைகளை தயாரித்து முன்வைக்கவுள்ளோம் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

No comments:

Post a Comment