வீடுகளுக்கு சென்று சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு செய்யும் திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. பரீட்சார்த்தமாக கண்டி பகுதியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக பத்ம உதயசாந்த எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சிறுநீரக நோயாளர்கள் தொடர்பில் அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, சிறுநீரக நோயை கட்டுப்படுத்தவும் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அமைச்சு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
மலேசியாவில் இருந்து ஆயிரம் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வீடு வீடாக சென்று இரத்த சுத்திகரிப்பு மேற்கொள்ளும் திட்டத்தை ஓரிரு மாதங்களில் ஆரம்பிக்க இருக்கிறோம். இது தவிர ஜெர்மனியில் இருந்தும் இவ்வாறான இயந்திரங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment