10 மாதங்கள் கடந்தும் பாராளுமன்றத்தில் மிளகாய்த் தூள் வீசி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தொடர்பில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.
நீதித்துறை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினை காரணமாக ஆளும் தரப்பினர் இன்று பிணைமுறி மோசடி தொடர்பில் கூடுதலாக பேசுகின்றனர். இது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் விஜித ஹேரத் எம்.பி தெரிவித்தார்.
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக நியமிக்க பாடுபடுபவர்கள் இன்று பிணைமுறி மோசடிபற்றி பேசுகின்றனர். இவர்கள் தான் பிணை முறி தொடர்பான கோப் விசாரணையில் பின்குறிப்பு இட்டார்கள். வழக்கை துரிதமாக விசாரணை நடத்துமாறும் அவர்கள் கோருகின்றனர்.
கடந்த 51 நாள் ஆட்சியில் எதிரணியினர் மிளகாய்த் தூள் வீசி தாக்குதல் நடத்தியும் பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியும் அழிவு ஏற்படுத்தினார்கள். இவர்களுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
(ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்)
No comments:
Post a Comment