ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்துவிட்டோம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்துவிட்டோம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ​வேட்பாளர் தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் யார் என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அப்புத்தலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு விடுக்கப்படவில்லை.

ஏனைய கட்சிகள் தமது வேட்பாளர்களை உடனடியாக அறிவித்திருந்தாலும் தற்போது அவர்களுக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறு அவசரப்படத் தேவையில்லை.

எமது பயணத்தை நாம் மேற்கொள்வோம். யாரும் குழப்பமடைய வேண்டாம். எங்களது வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என எதிர்க்கட்சிக்கு கூறுகிறேன்.

எமது வேட்பாளர் யார் என்று நாம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தீர்மானித்து விட்டோம். ஆனால் அதனை தற்போது என்னால் கூற முடியாது. அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருங்கள்” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment