ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வட மாகாணத்தில் படையினரிடத்தில் உள்ள பொதுமக்கள் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடினோம். இதன்போது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமில்லாத அனைத்துக் காணிகளையும் அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் விடுவிக்குமாறு கூறியிருந்தார் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
அதற்கமைவாக, வட மாகாணத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இவ்விடயம் சம்பந்தமான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதன் பிரகாரம், எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்ட ரீதியாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் பற்றி விபரங்களை எனக்கு அனுப்பி வைக்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன்.
அதன் பின்னர் மாவட்ட ரீதியாக உரிய தரப்பினரையும், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதோடு அம்மாளிகையின் பின்னால் அமைந்துள்ள கோவில் மற்றும் சமாதிக்குச் சொந்தமான தனி நபரையும் குறித்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment