மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யாரும் நிம்மதியாக தூங்கி எழும்பிய காலங்களே இல்லை : ஆசாத் சாலி - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2019

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யாரும் நிம்மதியாக தூங்கி எழும்பிய காலங்களே இல்லை : ஆசாத் சாலி

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யாரும் நிம்மதியாக தூங்கி எழும்பிய காலங்களே இல்லை. இரவில் தூங்கிய நாம் மறுநாள் காலையில் எழுந்திருப்போமா என்ற சந்தேகத்துடனும், அச்சத்துடனுமே நான் வாழ்ந்து வந்தோம். இந்த அரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டுமா? என்று நாம் நன்கு சிந்திக்கவேண்டும் என முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், தேசிய ஐக்கிய முண்ணியின் தலைவருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.

RKS மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்காவின் 7வது ஆண்டு நிறைவும், கெளரவிப்பு விழாவும் சனிக்கிழமை (31) அட்டாளைச்சேனை லெயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் அதன் நிறைவேற்றுப் பணிப்பார் எம்.எம்.றுக்ஸான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த நான்கரை வருடங்களாக மிக நிம்மதியாக தூங்கி எழும்பிய பொன்னான காலத்தையும், இரவு நேரங்களில் எவ்வித அச்சமின்றி தனிமையாக நடமாடவும், பிரயாணங்களை மேற்கொண்ட காலங்களை நாம் இல்லாதொழிக்கவேண்டுமா? என்று இந்தக் காலகட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களாகிய நாம் சிந்தித்து செலாற்றவேண்டும்.

மஹிந்த அரசை இல்லாதொழித்த நாம் மீண்டும் அந்த அரசை கொண்டு வர ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது. அப்படி நாம் கொண்டு வருவோமாக இருந்தால் எமக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் பாரிய துரோகமாகும். அத்துடன் எமது எதிர்கால சந்ததியினரை நாம் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியே தவிறே வேறு ஒன்றுமில்லை.

கோட்டாபாய ராஜபக்ஷ ஒரு நாளும் ஜனாதிபதி வேட்பாளராக வரமுடியாது. அவர் வருவதில் பாரிய சட்டப் பிரச்சினை உள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக சிராந்தி ராஜபக்ஷவேதான் வருவார் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்குகொள்ளுங்கள்

மாஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஊடக நிறுவனங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாரிய சேதங்களையும், உயிர் அழிவுகளையும் ஏற்படுத்திய அரசாங்கமாகத்தான் இருந்து. எங்களது அரசில் ஒரு அழிவுகூட ஊடக நிறுவங்களுக்கோ அல்லது ஊடகவியலாளர்களுக்கோ நாங்கள் செய்யவில்லை. இதை யாவரும் அறிவீர்கள்.

நிம்மதியற்றவர்களாக வாழவேண்டுமாக இருந்தால் மஹிந்த அரசை கொண்டு வாருங்கள். இல்லை நாம் நின்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டுமாக இருந்தால் எமது அரசைக் கொண்டு வாருங்கள்.

எம்முடைய, எமது எதிர்கால சந்ததியினருடைய நிம்மதியான, சுதந்திரமான வாழ்க்கையை கொண்டு வருவதும் அல்லது இல்லாமல் செய்வதும் எமது கையில்தான் உள்ளது என்பதை மறந்துவிடவேண்டாம் என்றார்.

பைஷல் இஸ்மாயில் 

No comments:

Post a Comment