“கடந்த மூன்று தசாப்தங்களாக யுத்தத்தினால் அல்லலுண்ட நமது உட்கட்டமைப்பு வசதிகள் ஒருபுறம் நசுக்கி, ஒடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொருபுறம் உரிமைகள் மழுங்கடிக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் சமஅளவில் கட்டியெழுப்ப வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவர் மத்தியிலும் உள்ளன.”
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவினர் மருதமுனையில் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல்கள் உள்ளன. அவற்றில் மருதமுனைக்கு என விஷேட பல திறமைகள் உள்ளன. அரசியல், நிர்வாகம், அறிவு ரீதியானவர்கள் பெரும்பாலும் மருதனையில் உள்ளார்கள். இது ஒரு பெரிதொரு வளம் அவற்றை பிரயோகிக்க வேண்டிய நமது கடமை. கிட்டத்தட்ட 4 கோடி ரூபா பெறுமதயளிவில் இம் மண்ணில் இரு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
கம்பெரலிய எனும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பாரிய திட்டமொன்று நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதே போல தங்க வீதிகளாக ரண் மாவத் திட்டத்தினூடாக வீதிகள் அனைத்தும் மினுங்குகின்றன. இது தவிர எத்தனையோ அபிவிருத்திகளை ஒவ்வொரு அமைச்சினூடகவும் அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. நாம் அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறவேண்டும்.
இது போன்ற இன்னும் பல திட்டங்களால் நாடு மிளிருகின்ற சந்தர்ப்பங்களில் கட்சியினூடாக ஏனைய அனைத்து ஊர்களுக்கும் அபிவிருத்திகளை விருத்தி செய்ய எத்தணித்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கான முன்னொழிவுகளையும், செயற்றிட்ட அறிக்கைகளையும் தயாரித்து கட்சியின் அமைப்பாளர்களாகியவர்கள் என்னிடம் ஒப்படையுங்கள் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்க நான் முழு மூச்சாக செயற்படுவேன்.
ஆகவே, இவை எல்லாவற்றையும் சமமான சூழலில் செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இருப்பினும் அபிவிருத்தி எனும் விடயத்தில் எனக்குள்ள அவா மக்கள் முன்னிலையில் மேலோங்கும் பலவித அபிவிருத்திகளை கொண்டுசெல்ல எத்தணிக்கின்றது. அதற்காக திறம்பட முன்னெடுப்புக்களை மேற்கொள்வேன்.
அதற்கான முனைப்புக்களுடன் அகில மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கும் இவ்வாறான ஒன்றுகூடல்கள் அடிக்கடி ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் திறம்பட்ட மக்கள் சக்தியுள்ள கட்சியாக இக் கட்சியை வளர்க்க நாம் அனைவரும் முனைய வேண்டும். – என பாராளுமன்ற உறுப்பினர் திடஉறுதிபூண்டார்.
மேலும், நிகழ்வில் உரையாற்றிய பலர் கூறிய விடயங்களில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் பல்கலைத்தில் உபவேந்தராக இருந்த காலத்திலேயே அவரால் ஆற்றப்பட்ட பல்வேறு சேவைகள் பற்றி கூறியிருந்தனர். உண்மையிலேயே இவ்வாறு இப் பிரதேமச மக்கள் நன்றியுணர்வோடு இருக்கின்றமையை பெருதும் மெச்சுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அதே நேரம் தற்போதயை காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் மனுக்கள் கோரப்படாத நிலைமையிலும்; தனது சொந்த எண்ணத்தில் உதித்த சேவையின் நிமித்தம் மருதமுனை மண்ணுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளையும் அவர்கள் நன்றியுணர்வோடு எடுத்துக் கூறினார்கள்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினரின் சூட்சுமமான சேவை நலன்களையும் நினைவு கூறி, மருதமுனை மட்டுமல்லாது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பாராளுமன்ற உறுப்பினராது அயராத சேவை முன்னெடுப்புக்களும், அவரின் அரவனைப்பு உக்திகளும், அ.இ.ம.க.வின் வளர்ச்சி சார் விடயங்களும் பலரால் பேசப்பட்டன.
இவற்றையெல்லாம் செவிசாய்த்த பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையின் இறுதியில் “இவ்வாறான நன்றியுணர்வுள்ள மக்களிடம் எமது பிரதேச அபிவிருத்திகளை இன்னும் வலுவடையச் செய்ய எத்தணிக்க தூண்டுகின்றது என ஆணித்தரமாக குறிப்பிட்டார்” என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment