ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹுமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படும் முன்னர் இந்நாட்டின் பாதுகாப்பு செயலாளராக பாரிய பதவியை வகித்தவர். அக்காலத்தில் ஊடக சுதந்திரம், தனியார் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் சுதந்திரம் என்பன கேள்விக்குறியாக இருந்தமை நாம் அனைவரும் அறிந்ததே.
அக்காலத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாகவும், ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது இந்ந நிலைமை என்றால், அவர் ஜனாதிபதியாக பதவியேற்றால் எவ்வாறான நிலை ஏற்படும் என பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹுமான் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment