பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவு சென்றடைந்தார் - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவு சென்றடைந்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்றையதினம் (02) மாலைதீவு புறப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது தூதுக்குழுவினர், அந்நாட்டு தலைநகர் மாலையின் வெலனா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

பிரதமர் தலைமையிலான குழுவினரை, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் வரவேற்றார்.

2019 இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட குழுவினர், விமான நிலையத்திலிருந்து சிறப்பு படகு அணிவகுப்பு மூலம் மாலை குடியரசு சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குடியரசு சதுக்கத்திற்கு அருகிலுள்ள இசதீன் ஜெட்டிக்கு அருகில் வைத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது தூதுக்குழுவை மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மட் சொலிஹ் மற்றும் மாலைதீவின் முதல் பெண்மணி உள்ளிட்டோரால் வரவேற்கப்பட்டனர்.

இக்குழுவில், பிரதமரின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன, உயர் கல்வி, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரஊப் ஹக்கீம், சமூக வலுவூட்டல் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அனோமா கமகே, பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க, மாலைத்தீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் அசோகா தோரதெனிய மற்றும் பிரதமரின் விசேட உதவியாளர் செண்ட்ரா பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment