"நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்."
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியதாவது "ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விவகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையிலெடுத்தமை என்னவென்று எனக்குத் தெரியவில்லை.
எனது தனிப்பட்ட ரீதியான கருத்து, தேர்தல் முடிந்த பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம். இந்த விடயத்தைக் காரணம் காட்டி தேர்தலை தாமதப்படுத்த எந்தக் கட்சிகளும் முயலக் கூடாது. எமது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை கட்சியின் தலைமைப்பீடம்தான் எடுக்கவேண்டும்" - என்றார்.
No comments:
Post a Comment