ஏ 09 முறிகண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
இவ் விபத்தானது அறிவியல் நகர் பகுதியில் யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்துக்கருகே இன்று பி.ப 4.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது பெரமுனவின் செயற்பாட்டாளர் தீபன் என்பவரே உயிரிழந்தார்.
கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தும் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்குச் சென்ற தீபனின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
தனியார் பேருந்தின் வலது பக்கமாக மோதியுள்ள நிலையில் தீபனின் வாகனத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்த அவரை வெளியில் எடுப்பதற்கு நீண்டநேரம் போராட வேண்டியிருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இரும்பு கடப்பாரைகள் கொண்டு வாகனத்தின் கதவு, மற்றும் முன்பகுதிகளை அப்புறப்படுத்தியே தீபனின் உடலை வெளியே எடுத்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.
எம். தமிழ்செல்வன்
No comments:
Post a Comment