முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடு சட்டவிரோதமானது - வழக்கின் செலவை செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Monday, August 5, 2019

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடு சட்டவிரோதமானது - வழக்கின் செலவை செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு

வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை, முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் பதவி நீக்கம் செய்த முறை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் டெனீஸ்வரனை பதவி நீக்கி, புதிய அமைச்சர் நியமிக்கப்பட்ட விதமும் சட்டவிரோதாமானது என அறிவித்துள்ளனர்.

இதற்கமைய இந்த வழக்கிற்கான செலவை மனுதாரரான பா.டெனீஸ்வரனுக்கு செலுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட மாகாணத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தன்னை பதவி நீக்கியமை சட்டத்திற்கு புறம்பானது என உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீ்ட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்ற தவறியதால் நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை செப்டமபர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கும் தீ்ர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment