மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொண்ட அபிவிருத்திகளைத் தவிர, புதியதாக எந்தவொரு செயற்பாட்டையும் வடக்கில் காணக்கூடியதாக இல்லையென ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
சுசில் மேலும் கூறியுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் பல்வேறு செயற்பாடுகளை வடக்கிற்காக மேற்கொண்டோம்.
ஆனால், கடந்த அரசாங்கத்திற்கு பின்னர் புதியதாக எந்தவொரு செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்பது எம்மால் தற்போது காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த அரசாங்கம் வடக்கிற்கு என்று எந்தவொரு செயற்பாட்டையும் இதுவரையான காலப்பகுதியிலும் செய்யவில்லை என்பதை நாம் இன்று நேரடியாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
ஹோட்டல்களையும் தமக்கான கட்டடங்களையும் நிர்மாணிக்கும் பணியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகிறதே ஒழிய, மக்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்ய இதுவரை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மேலும், தம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சலுகைகளை வழங்குவதையும் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டுதான் வருகிறது. இது தொடர்பாக தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்” என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment