கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம், 2019ம் ஆண்டிற்குரிய வருடாந்த இடமாற்றத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக, அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ. முபாறக் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் தகவல்கள் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட இடமாற்றக் கட்டளையில் உள்ள உத்தியோகத்தர்கள் ஏன் இதுவரை விடுவிக்கப்படவில்லை. கடந்த 05ஆம் திகதி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை முறையாக பதிலளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்ததுடன், கிழக்கு மாகாண சுகாதாரத்துறை நிருவாகம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
2019.01.01ஆம் திகதி முதல் இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டிய உத்தியோகத்தர்கள் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், சந்திவெளி பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை காலமும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றி இடமாற்றக் கட்டளை பெற்றுள்ளவரை விடுவிப்பதற்குரிய பதிலாள் வருகை தந்துள்ளார். ஆனால் முறையான விடுவிப்பு செய்யப்படாததனால், வருகை தந்தவருக்குரிய கடமைப் பொறுப்புக்கள் முறையாக வழங்கப்படாமல் இருப்பதையும், அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கைக்கு மேலதிகமாக ஆட்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஒலுவில் விசேட நிருபர்
No comments:
Post a Comment